10/12/2005

மழை மிகுந்த பகலில் மனம் மகிழ்வில்

கவுசல்யாவை தெரியும்தானே. நுழைவுத் தேர்வில் 98.5% மார்க் எடுத்து ஸ்டான்லி மெடிகலில் சேர்ந்துள்ளார். பொருளாதார வசதி குறைவால் கஷ்டப்படுபவர். அந்தியூரைச் சேர்ந்த தைரியப்பெண். அவரைப் பற்றி டெக்கான் க்ரானிகலில் படித்த நம் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் அவருக்காக தமிழ்மனத்தில் உதவி கேட்டு தன் வலைப்பூவில் பதிவு போட்டார். நல்ல மனம் படைத்தவர்கள் நிதியளித்தனர். அவ்வாறு சேர்ந்த நிதியை இன்று அவரிடம் பாலா அவர்கள் டெக்கான் க்ரானிகல் அலுவலகத்தில் வைத்து செக்காக சேர்ப்பித்தார்.

நேற்று என்னுடன் பாலா அவர்கள் தொலைபேசினார். குறிப்பிட்ட அந்த நேரத்தில் நானும் அந்த இடத்துக்கு வரமுடியுமா எனக் கேட்டார். நானும் சம்மதித்தேன். இன்று நாங்கள் இருவரும் அங்கு சென்றோம். ஒரே மழை. 100 அடி சாலையிலிருந்து பத்திரிகை அலுவலகம் செல்லும் சாலை தண்ணீரில் மிதந்தது.

டெக்கான் க்ரானிகல் அலுவலகத்தில் திரு பகவான் சிங் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். ரொம்ப சுவாரசியமான விஷயங்களைக் கூறினார். அலுவலகத்தில் வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இத்தனை பேர் பாடுபட்டால் ஒரு பத்திரிகை வெளி வருகிறது.

மழை காரணமாக கௌசல்யா வருவதற்கு சற்றே தாமதமாயிற்று. நல்ல படிப்புக்களை உடைய அப்பெண்ணை பார்க்க மனம் நிறைந்தது. அப்பெண்ணுக்கு எல்லாம் வல்ல என் அப்பன் மகரநெடுங்குழைகாதனிடம் பிரார்த்தனை செய்தேன். தமிழ் மீடியத்தில் படித்த பெண். சற்றே தடுமாறுகிறார் ஆங்கிலப் பாடங்களால். ஆனாலும் சமாளித்து வருகிறார். அவருடைய ஆங்கில அடிப்படையை பலப்படுத்த பகவான் சிங் அவர்கள் மின்ட் பகுதியில் ஒரு டியூட்டர் தேடி வருகிறார். அம்முயற்சியும் வெற்றிபெற வேண்டும்.

இப்போதுதான் திரும்பினேன். இதை தட்டச்சு செய்யும்போது வெளியில் பலத்த மழை. இம்முறையாவது மழை பொய்க்காமல் நன்கு பெய்ய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

உங்கள் நல்ல மனம் சிறக்க வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஈழநாதன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

good post!

ALL THE VERY BEST KAUSALYA!

and all the best for India for a good monsoon!

மதுமிதா said...

நல்ல விஷயம் டோண்டு அவர்களே

என்றென்றும் பாலாவுக்கும் உங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவிக்கிறேன்

கௌசல்யாவின் எதிர்காலம் சிறக்க நீங்கள் எடுத்த முயற்சி அப்பெண்ணின் மன வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருக்கும்

dondu(#11168674346665545885) said...

நன்றி சுரேஷ் மற்றும் மதுமிதா அவர்களே.

க்ரெடிட் முழுவதும் பாலாவுக்குத்தான். நான் கூடச் சென்றேன் அவ்வளவுதான். முழுமுயற்சியும் அவருடையதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

மகிழ்ச்சியான விஷயம். அவரின் அடுத்தடுத்த செமஸ்டர்களை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது குறித்து கேட்டறிந்தீர்களா? ஏதும் ஸ்காலர்ஷிப் உள்ள்தா? மேலும் எதுவும் விபரம் இருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

dondu(#11168674346665545885) said...

இதை பற்றி பாலா அவர்கள் தன் பதிவில் போடுவார் என நினைக்கிறேன். ஏனெனில் அவரும் இந்த விஷயத்தை பற்றி கோடி காட்டியுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது